Tuesday 25 August 2015

fifth day

நீண்ட இடைவெளிக்கு பின் வெளி வந்த வீர பாண்டிய கட்டபொம்மன் படம் 5வது நாளில் விளம்பரம் மற்றும் உண்மை நிலவரம்.

தினதந்தியில் பெரம்பூர் s 2 படம் ஓடுவதாக விளம்பரம் செய்து உள்ளார்கள் ஆனால் உண்மை நிலை மேல காட்டபட்டுள்ளது.




வில்லிவாக்கம் A.G.S. திரை அரங்கு இன்று காலை காட்சி மற்றும் இரவு காட்சி.

தற்போது கிடைத்த தகவல் வெள்ளி முதல் வீர பாண்டிய கட்டபொம்மன் சத்யம் ஸ்டுடியோ 5இல் மட்டும் 

Monday 25 August 2014

மணிமாறன் - நம்பி

மணிமாறனை நம்பலாம் நம்பி பேருலே மட்டும் இருந்த நம்பலாமா.

மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் காவியத்தின் booking நிலவரம் கடைசி நாள்.




அரிமா நம்பி திரைபடத்தின் booking நிலவரம் (கலவரம்) இன்று















யாரை திருப்தி படுத்த இந்த வேலை.

Tuesday 22 July 2014

அரிமா நம்பி சாதனை

தின தந்தி பத்திரிகையில் வந்த அரிமா நம்பி விளம்பரம்


முன்பதிவு நிலை
சாந்தம் நாளைய முன்பதிவு 






அந்தந்த திரைஅருங்குகல் நிலவரம்









s2 திரைகள் தியாகராய மற்றும் பெரம்பூர் வீனஸ்



escape thirai matrum streaks


எங்கள் பொன்மனசெம்மலின் ஆயிரத்தில் ஒருவன் ஓட்டபடுகின்ற படம் என்றல் இது என்ன?

10 சதவீகிதம் கூட முன்பதிவு ஆகாத 2 வார படம்.
 



Monday 7 April 2014

கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சென்னை மாவட்டம் பதில்

"சோம்பேறி பிச்சைக்காரனுக்கு பாயசம் கிடைத்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் கடந்த 2012ம் ஆண்டு முதல் செய்து வரும்  தற்குறிகளே" !

ஏதோ உங்கள் "கர்ணன்" படம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் ஆனால், எங்கள் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" இன்றைய கால கட்டத்துக்கு பொருந்தாது என்று உளறும் கோமாளிகளே !

இதே "கர்ணன்" எத்தனை முறை வெளியிட்டார்கள் ? அதில் வெற்றி பெற்ற
சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா ? உங்கள் அபிமான நடிகர் இறந்த சமயத்தில்
கூட இதே "கர்ணன்"  படம் உங்கள் தியேட்டரில் போட்டும் அது சரியாக ஓட
வில்லை என்பதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் அதை மறக்க மாட்டோம்.

பொதுவாக தமிழகத்தில் தெலுங்கர்கள் அதிகம்.  அதன் அடிப்பைடயில், கர்ணன் படம் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, திரையில் தெலுங்கு முன்னணி நடிகர், அங்கே  இன்று வரை எவராலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் அமரர்  என். டி.ராமராவ்  அவர்களின் அறிமுக காட்சியில் மிகுந்த கை தட்டல் கிடைத்தது.  (உதாரணம் : சத்யம் வளாகத்தில் உள்ள அரங்கு).  என். டி. ஆர். அவர்களுக்கு இங்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு - அவருடைய மகன்  ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பேரன் ஜூனியர் என். டி. ஆர். படங்கள் வரும்போது அதன் அறிகுறியை காணலாம்.

"கர்ணன்"  படத்தை பார்க்க மக்களை வரவழைக்க  சபாக்களை அணுகி மக்கள்
தலையில் டிக்கெட்களை  திணித்தது,  தியேட்டரை  நிரப்புவதற்கு பள்ளிக்கூடம் பள்ளிக்கூட மாய் பிச்சை எடுத்தது, ஊடக ங்களுக்கு செலவு செய்தது;  படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு,பல ஊர்களில் பெட்டிக்குள் தூங்கி கிடந்த இந்த படத்தை("கர்ணன்") தூசு தட்டி படத்தை எடுத்து வெளியிட்ட திவ்யா சொக்கலிங்கத்தின் வியாபார யுக்தி தான் இந்த கர்ணன் படத்தின் விடை .


எங்களது கலைவேந்தனின் "ஆயிரத்தில் ஒருவன்"  படத்தை பார்க்க
வருபவர்களோ ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். .மேலும் இந்த படம் எந்த நகரத்திலும் இரண்டு வருட இடைவெளி கூட கிடையாது.  அதுவும், தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளி பரப்பினார்கள்.  மேலும், இந்த தேர்தல் நேரத்தில், போஸ்டர் ஒட்டவும், பேனர் வைக்கவும் தடைகள் பல.

இத்தனைக்கும் மத்தியில் படம் வெற்றி நடை போட்டுதான் வருகிறது.  அது
மட்டுமல்ல,  உங்கள் படத்தை இந்த தலைமுறை பார்ப்பதாகவும், எங்கள் படத்தை மக்கள் பார்க்க வருவதில்லை என்று கூறும் அறிவுக்கொழுந்துகளே ! உங்கள் படத்தை இந்த இளைய தலைமுறையினர் எப்படி ஒதுக்கினார்கள் என்று சொல்லட்டுமா?

அண்ணன் தங்கை பாசத்தை இன்றையை படங்களிலும் ஏன்  தொலைக்காட்சி தொடர்களில் கூட எதார்த்தமாக காட்டி வரும் வேளையில், உங்கள் படத்தில் உள்ள  ஓவர் ஆக்டிங் மற்றும் அளவுக்கதிகமான மிகையான செண்டிமெண்ட் காட்சிகளும், மக்களிடம் எடுபடாமல் "பாசமலர்" மோசமலர் ஆனது.

வெறுமனே குடித்து விட்டு குத்தாட்டம் போடும் ஜமீன் எவ்வளவு பெ ரிய
மாளிகையில் வண்ணத்தில் காண்பித்தாலும் மக்கள் எண்ணத்தில் ஒட்டாமல்
இடிந்து போனது.  இன்றைய கால கட்டத்துக்கு  இந்த படத்தால் எந்த கருத்தும்
இல்லையென்று மாளிகையின் அருகில் கூட எவரும் வர வில்லை.

பக்திபடத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு பதிலாக மிக மோசமான வக்கிரத்
தன்மையோடு, (மீனவர் வேடத்தில், சாவித்திரியுடன்  உங்கள் அபிமான நடிகர்
வரும் காட்சி) காண்பித்ததும், கடவுளுக்கே உரித்தான கனிவைக் காட்டாமல்
உங்கள் நடிகருக்கே  உரிய தேவையில்லாத அலட்டலும் . உறுமலும்  இன்றைய மக்களுக்கு தேவை இல்லை என்று இந்த புராண  படத்தையும் உதறி விட்டு ஓடி விட்டனர்.

சுமார் 11 வருட இடைவெளியில் இரட்டை வேடத்தில் வந்த "என்னைப் போல் ஒருவன்" படத்தை உன்னைப் போல் ஒருவன் எங்களுக்கு தேவையில்லை என்று மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

யாரும் இல்லாத வேளையில் (ரஜினி, கமல் ஆரம்ப கால கட்டங்களில்) வெள்ளி விழாவை எட்டிப் பிடித்த "திரிசூலம்"  இப்போது, ஓரு  சென்டரில் கூட
சரியாக போக வில்லை.  உங்கள் நடிகனின் குஞ்சல உடுப்புக்கள் இந்த தலைமுறை பார்த்தால், தலை சுற்றி மயக்கம் போட்டு விடுவார்கள்.  அதனால் தான், இந்த படத்துக்கு இந்த கால கட்டத்தில் "அதோ கதி ".

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்பாக்கத்தில்  சந்தி சிரித்த
"சந்திப்பை" மக்கள் சந்திக்க மறுத்து தியேட்டர் பக்கமே வர மறுத்து
விட்டனர்.

இது உங்களது சமீபத்திய சாதனை துளிகள் .  இதற்கு முன்பு  உங்கள் வரலாற்றை எடுத்தால் அதுவும் நாறும்!.

25 வருட இடைவெளியில் வெளியான அன்னையின் ஆணை, கெயிட்டி தியேட்டரில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது மக்களின் ஆணை.

30 வருட இடைவெளியில் மிகுந்த பொருட்செலவில் வண்ணத்தில் எடுத்த, உங்களது அரங்கிலே போடப்பட்ட "தர்மம் எங்கே "படத்தின் நிலைமை என்ன ?.

தியேட்டருக்குள் ரசிகர்கள் எங்கே என கேள்வி எழுப்பினர் . இப்படிக்கும்
இந்த படத்தை உங்களது ரசிகர்களே பலர் பார்த்திருக்க மாட்டார்கள். உங்கள்
படம் உங்களாலேயே நிராகரிக்கப்பட்டதை மறந்து விட்டீர்களே !

மகாபாரத கதையை உங்கள் நடிகர் மூலம் மக்கள் பார்த்து இந்த தலைமுறையினர் ...........என்று உலரும் அறிவு ஜீவிகளே.

மேலும் ஏதோ  எரால்  பிளைன் நடித்த "CAPTAIN BLOOD " சண்டை காட்சிகள்
தத்ரூபமாக இருப்பதாகவும் , எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன் "
காவியத்தில் இடம் பெற்ற வாள் சண்டை காட்சிகளை இன்றைய தலைமுறையினர் ரசிக்கவில்லை  என்று கிறுக்குத்தனமாக கிறுக்கியிருக்கும் கிருக்கர்களே,எரால்    பிளைன் நல்ல நடிகர்தான். அவருடைய வாள்  சண்டை புகழ் பெற்றதும் உண்மைதான் .  ஆனால் அவரைவிட 100 மடங்கு சிறந்த முறையில் வாள் வீச்சில் வெலுத்து  வாங்கியவர்  எங்களது கலை வேந்தன்தான் என்பதற்கு ,"ஆயிரத்தில் ஒருவன் "மட்டுமல்ல. மருத நாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வாதிகாரி, மதுரைவீரன் , நாடோடி மன்னன், நீரும் நெருப்பும்  போன்ற எண்ணற்ற படங்கள்.

தரத்தைப் பற்றி பேசும் தராதரம் கெட்டவர்களே, அன்பைத்தேடி, அன்பே ஆருயிரே, லாரி டிரைவர் ராஜாகண்ணு (இரண்டு இட்லி ஒரு வடை-உங்கள் நடிகர், நடிகை ஸ்ரீப்ரியாவை பார்த்து பேசும் அற்புத வசனம்)  பார்ப்பவர்கள் எங்களிடம் தரத்தைப் பற்றி .பேசுவதா ?

மற்ற மொழி படங்களில் இருந்து சில காட்சிகளை தழுவி நம் படத்தில் வைப்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் திரையுலகில்
நடைமுறையில் உள்ள விஷயம்தான் .  ஆனால்  அதை எவ்வாறு சிறப்பாக நாம் எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில்
captain blood  படத்தில் உள்ள காட்சியை கொஞ்சமும் தரம் குறையாமல்,
"ஆயிரத்தில் ஒருவன் " படத்தில் எடுத்தார்கள். அதை மக்கள் இன்றும்
பூரிப்போடுதான் பார்க்கிறார்கள்.  ஆனால்  "மேரா நாம் ஜோக்கர் " படத்தில்
வரும் காட்சியை , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வைத்து அதை மிகைபடுத்தி
காட்டி, சோகத்திற்கு பதில் எரிச்சலை ஏற்படுத்தியதை மறந்து விட்டீர்களா ?

புள்ளிவிவரம் சொல்லும் புத்திசாலி ராஜாக்களே, கடந்த 25 வருடமாகவும் ,
அதற்கு முன்பும் ,தமிழகம் முழுவதும் , யாருடைய படம் அதிக
தியேட்டரில் , அதிக காட்சிகள் ஓடியது என்பதை நன்கு விவரம் அறிந்த திரை
அரங்கு உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .  எந்த ஒரு வருடமாவது , உங்கள் நடிகரின் படம் ஒரு காட்சி அதிகம் என்று அவர்கள் கூறினால், அப்போது வந்து பேசுங்கள்.  ஏதோ, ஜென்ம ஜென்மத்திற்கும், ஒரே படத்தைப் பற்றி பேசும் உங்களுக்கு, பொது கழிப்பறையில் வக்கிர தன்மையோடு வரைந்து கிறுக்கி எழுதும் மன நோயாளி வேலையை போல்தான், அன்று முதல் (சாந்தி அரங்கில் ) இன்று வரை (இணைய தளத்தில் ) செய்து வருகிறீர்கள்.

உங்களிடம் போட்டியிடுவது, உங்களை தாக்குவது ,"செத்த நாயை கல்லால்
அடிப்பதற்கு சமம் "  ஆனால் இவ்வளவு சொல்லியும் திரும்ப திரும்ப  விஷமத்தனத்தை செய்பவர்களை எப்படி அடக்குவது ?  அதனால்தான் உங்கள் திரியில் பதிவான 173வது பக்கத்திற்கான செய்திகளுக்கு இந்த பதிலை தருகிறோம்
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சென்னை மாவட்டம்.

Tuesday 16 October 2012

மங்காத ஒளிவிளக்கு

K. Babu, Nanmangalam, Chennai

சமீபத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட மக்கள் திலகத்தின் "ஒளி  விளக்கு"  பற்றிய ஓர் பெருமை மிகு குறிப்பு  :

1.  எந்த வித  ஆரவாரமும் ஆர்ப்பட்டமும் இல்லாமல் சந்ததியின்றி (சைலன்ட்) வெளியிடப்பட்ட திரைப்படம்.
2.  டிரையிலர் என்ற பெயரில் விழா எதுவும் எடுக்கப்பட வில்லை.
3.  டிஜிட்டல் முறையில்  வெளியிடப்பட வில்லை.
4.  பழங்கால புராணக்   கதையை தழுவி எடுக்கப்பட வில்லை..
5.  நட்சத்திர  பட்டாளங்களை கொண்டு தயாரிக்கப் பட வில்லை.
6.  120க்கும் குறைவான இருக்கைகள் கொண்ட சிறிய  திரை அரங்கில் ஒரு காட்சி மட்டும் ஓட்டப்பட்டது கிடையாது.
7.  1060 இரூக்கைகள் கொண்ட சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் 3வது வாரமாக வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.
8.  குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டித் தரும் படமாக விளங்குகிறது.
9.  எல்லாவற்றிக்கும் மேலாக மிக மிக சுமாரான பிரிண்ட்ட்டில் இத்   திரைப்படம். ஓடிக்  கொண்டிருக்கிறது.

81  வருட  தமிழ் திரைப்பட வரலாற்றில்  இது  ஒரு மகத்தான சாதனை. 

பொன் மனச் செம்மலின் பட சாதனைகளை அவரது இன்னொரு படத்தினால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதற்கு இது மற்றும் ஓர்  எடுத்துக்காட்டு.  
 

Thursday 11 October 2012

சாதனை செய்த ஒளிவிளக்கு

சமீபத்தில் சென்னை அண்ணா மற்றும் மகாலட்சுமி அரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட மக்கள் திலகத்தின்  ஒளி விளக்கு திரைப்படத்தின் விழா கொண்டாட்டங்கள் மாவட்டத்தின் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புக்கள் சார்பில் பிரமிக்கத்தக்க வகையில் நடைபெற்றன.    

பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கண் கொள்ளா காட்சியை பொது மக்கள் கண்டு களித்தனர்.  சென்னை அண்ணா அரங்கில் பொன் மனச் செம்மல் அவர்களின் பிரம்மாண்டமான கட் அவுட் களுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர்  உட்பட பல்வேறு  நற் திரவ அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 

சென்னை மகாலட்சுமி அரங்கின் வெளியே, ரசிகர்களின் கூட்டங்களால்  சாலை போக்கு வரத்து ஸ்தம்பித்தது.

முதல் வாரத்தில் 30-09-12 ஞாயிறு அன்று படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும்  சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், கேசரி மற்றும் சுண்டல் வழங்கப்பட்டன.

2வது வாரமும் கடந்த 07-10-12 ஞாயிறு அன்றும் இதே போன்று உணவு பண்டங்கள்  வழங்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மன்ற  அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டன. 

சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்கள் விவரம் வருமாறு:

1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம்,  சென்னை - 2
2. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, தமிழ் நாடு
3. ஒலிக்கிறது உரிமைக் குரல் மாத இதழ் மற்றும் அதனை  சார்ந்த அமைப்பாகிய அனைத்திந்திய  எம்.ஜி.ஆர். பொது நல இயக்கம்
4. எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சைதை, சென்னை - 15
5. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
5. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு  , சென்னை - 12. 
6.  இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,  தமிழ் நாடு
     (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
       பாரத ரத்னா டாக்டர்  எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
       நடிக மன்னன் எம்.ஜி.ஆர். கலைக்குழு)
 மற்றும் இதர பக்தர்கள்/அன்பர்கள் அமைப்பினர், சென்னை மாவட்டம்