Thursday, 11 October 2012

சாதனை செய்த ஒளிவிளக்கு

சமீபத்தில் சென்னை அண்ணா மற்றும் மகாலட்சுமி அரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட மக்கள் திலகத்தின்  ஒளி விளக்கு திரைப்படத்தின் விழா கொண்டாட்டங்கள் மாவட்டத்தின் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புக்கள் சார்பில் பிரமிக்கத்தக்க வகையில் நடைபெற்றன.    

பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கண் கொள்ளா காட்சியை பொது மக்கள் கண்டு களித்தனர்.  சென்னை அண்ணா அரங்கில் பொன் மனச் செம்மல் அவர்களின் பிரம்மாண்டமான கட் அவுட் களுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர்  உட்பட பல்வேறு  நற் திரவ அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 

சென்னை மகாலட்சுமி அரங்கின் வெளியே, ரசிகர்களின் கூட்டங்களால்  சாலை போக்கு வரத்து ஸ்தம்பித்தது.

முதல் வாரத்தில் 30-09-12 ஞாயிறு அன்று படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும்  சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், கேசரி மற்றும் சுண்டல் வழங்கப்பட்டன.

2வது வாரமும் கடந்த 07-10-12 ஞாயிறு அன்றும் இதே போன்று உணவு பண்டங்கள்  வழங்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மன்ற  அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டன. 

சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்கள் விவரம் வருமாறு:

1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம்,  சென்னை - 2
2. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, தமிழ் நாடு
3. ஒலிக்கிறது உரிமைக் குரல் மாத இதழ் மற்றும் அதனை  சார்ந்த அமைப்பாகிய அனைத்திந்திய  எம்.ஜி.ஆர். பொது நல இயக்கம்
4. எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சைதை, சென்னை - 15
5. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
5. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு  , சென்னை - 12. 
6.  இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,  தமிழ் நாடு
     (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
       பாரத ரத்னா டாக்டர்  எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
       நடிக மன்னன் எம்.ஜி.ஆர். கலைக்குழு)
 மற்றும் இதர பக்தர்கள்/அன்பர்கள் அமைப்பினர், சென்னை மாவட்டம் 

No comments:

Post a Comment