anm எழுதியதற்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் தரும் பதில்.
இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறோம். உங்கள் சிவாஜி கணேசன் அவர்கள், எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இப்பூவுலகினை விட்டு தெய்வமானபோது ஒவ்வொரு குழந்தையும்
வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தினார்.
எதிரிகளை அடிக்கும் சூழ்ச்சிக்காரர்
மற்றும் முதுகில் குத்துபவர் என்பது உண்மையாருப்பின் சிவாஜி கணேசன் அவர்கள் எங்கள்
எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் போது ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தி
இருக்க மாட்டார் என்பதை நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும். அப்படி அவர் பொய்யாக சொல்ல வேண்டிய அவசியம் உங்கள் சிவாஜி கணேசனுக்கு இல்லை அந்த வார்த்தைகள் உண்மையாய் அவர் நெஞ்சில் இருந்த வந்தவை.
நீங்கள் சிவாஜி கணேசன் அவர்களை
புகழ்ந்து கொள்ளுங்கள் ஆனால் எங்கள் புனிதத்தலைவரை விமர்சித்தால் விளக்க கணைகள் தொடரும். சிவாஜி கணேசன் அவர்களின் இளைய மகன் திரு.பிரபு அவர்கள் மீது கொண்ட மிகுந்த மரியாதை காரணமாக இத்துடன்
நிறுத்திக் கொள்கிறோம்.