திரு வி என் சிதம்பரம் அவர்கள் (முன்னாள் தக்கார் மீனாட்சியம்மன் திருக்கோவில் மதுரை) மக்கள் திலகத்தின் பேரன்பை பெற்றவர். பொன்மனச்செம்மல் அவர்கள் திரு வி என் சிதம்பரம் அவர்களை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் தக்காராக நியமனம் செயதார். அப்பொறுப்பை ஒன்பது ஆண்டுகள் திறம்பட செய்து அனைவரின் பாராட்டை பெற்றார். அப்பெருமகனின் மனிதநேயம் மற்றும் குண நலன்களை பற்றி பல நூல்களில் நிறைய எழுதி உள்ளார்.
திரைப்படதுறையினர், அரசியல் பிரமுகர்கள், ஆன்மீக பெரியோர்கள் மற்றும் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார்.
தமது தாத்தா வள்ளியப்ப செட்டியார் பட்ட கஷ்டங்களை மனதில் கொண்டு பிறர் துன்பம் நீங்க எராளமான உதவிகளை செய்து வருகிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதி தமது பிறந்த ஊரான ராங்கியத்தில் தமது தாத்தாவின் சிலையை திறந்து பல நல திட்ட உதவிகளை செயதார். முதல் தவணையாக ஐம்பது லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக போட்டுள்ளார். இரண்டாம் தவணையாக இன்னும் ஐம்பது லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக போட உள்ளார். வைப்பு தொகையில் வரும் வட்டியில் பல நல திட்ட உதவிகள் தொடர்ந்து செய்ய உள்ளார். மக்கள் திலகத்தின் வழியில் செட்டிநாட்டு வள்ளல்திரு வி என் சிதம்பரம் அவர்கள் ஏழை எளியவர் வாழ்வு வளம் பெற செய்து வரும் மனிதநேய உதவிகளை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்.
No comments:
Post a Comment