Saturday 23 June 2012

makkal thilagam rasigar c.s.kumar

C.S.Kumar one of makkal thilagam M.G.R. fan.


SCANNED FROM KALKI MAGAZINE.

vasool chakravarthi makkal thilagam

                                              கர்ணனின்  மறு வெளியீடு 100 நாள் ஒட்டிய    பரிதாபம் ;
1964  ஆண்டு பொங்கல் அன்று வெளி வந்த  மக்கள் திலகம்  நடித்த  தேவர் பிலிம்ஸ்  வேட்டைக்காரன் மற்றும்   நடிகர் திலகம் நடித்த  பந்துலுவின் பிரமாண்ட படமான  கர்ணனும் களம் இறங்கியதில்  வேட்டைக்காரன்  மகத்தான வெற்றி பெற்றது. கர்ணன்  வசூலில் வெற்றி பெறவில்லை.நூறு  நாட்கள்  சென்னை - சாந்தியிலும்  மதுரை  - தங்கத்திலும்  ஓடியது.
வேட்டைக்காரன்  சென்னை , சித்ரா - பிராட்வே - மேகலா , மதுரை .திருச்சி . சேலம்   நகரங்களில் நூறு  நாட்களும் சேலம் நகரில்  இருபது  வரங்களும்  ஓடி வசூலில்  சாதனை  படைத்தது . இது  வரலாற்று உண்மையாகும் .
1964  பின்னர்  மறு வெளியீட்டில் பல வருடங்கள் தொடர்ந்து  வேட்டைக்காரன்  மட்டும்  தமிழகம்  எங்கும் வெளியாகி  வசூல்  சாதனை  படைத்தது . கர்ணன்   அந்த  அளவிற்கு  வெளியாகவில்லை .
பந்துலு  தயாரிப்பில்   தொடர்ந்து நான்கு சிவாஜியின் படங்கள்  படு தோல்வி  [க.தமிழன் ,பலே பாண்டியா, கர்ணன் , முரடன் முத்து] கண்ட பின்  மக்கள் திலகம் mgr  அவர்களை  வைத்து  ஆயிரத்தில் ஒருவன்  படம் எடுத்து  மாபெரும்  வெற்றி  பெற்றது  வரலாற்று  உண்மையாகும்.

காலம் கடந்து  இன்றும் ஆயிரத்தில் ஒருவன்   ராயல்டி  படமாக திகழ்கிறது .

நீண்ட இடை வெளிக்கு  பின்னர் கர்ணன் படம்  திவ்யா பிலிம்ஸ்  மூலமாக  நாற்பது லட்சங்கள்  செலவு செய்து  டிஜிடலில்  ,மார்ச்  மாதம் 70  திரை அரங்குகளில்  ஒன்று. இரண்டு.மூன்று, நான்கு  காட்சிகளாக திரையிட்டு  பல  லட்சங்கள்  தினசரி செலவு செய்து  அணைத்து ஊடகங்கள்  மற்றும் தனியார்  நிறுவனங்கள் , மூலம் மாபெரும்  வெற்றி என்ற  மாய தோற்றத்தை  உருவாக்கினார்கள்.
வசூல்  ரீதியாக  சென்னை  - ஏவிஎம் - ராஜேஸ்வரி .நாகர்கோயில் ,திருச்சி , சேலம் ,கோவை  மற்றும் திருப்பூர்  நகரங்களில்   சாதனை உண்டானது .
25  நாட்களுக்கு பின்னர்  எந்த  ஒரு நகரிலும் தினசரி  மூன்று  கட்சிகள் ஓடாத நிலையில் பொய்யான விளம்பரங்கள்  தொடர்ந்து வெளியிட்டு வந்த திவ்யா பிலிம்ஸ்  மற்றும் இனைய தள சிவாஜி  நண்பர்களும்  ஏதோ  கர்ணன்  மகத்தான வசூல் சாதனை  என்றும் கர்ணன் முதல்  வெளியீட்டிலும்  வெற்றி என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை அரங்கேற்றி  வருகின்றனர் .சென்னையில்  தினசரி ஒரு காட்சியாக   இரண்டு  அரங்கில்  ஒட்டப்பட்டது ஒன்றும்  சாதனை அல்ல .

பல  கோடி  செலவு  செய்து  5  கோடி  வசூல் என்று  விளம்பரம் செய்யும்  இவர்களை பற்றி  உண்மை நிலவரம்  அறிந்தவர்கள்  புரிந்து கொள்வார்கள்.
மேலும் கர்ணன் 11  ஆண்டுகள் இடை வெளிக்கு பின்னர்  வந்த படம் , டிஜிடல் ,இந்து மத புராண கதை  மற்றும்  நட்சத்திர  பட்டாளம்  என பல அம்சம்  உள்ளதால் கோடிகள்செலவு  மற்றும்  ஊடக விளம்பரம் மூலம்  நிர்பந்திக்க பட்ட படம்.

இன்று 100 வது நாள்  ஓட்ட பட்ட கர்ணன்  எந்த காலத்திலும் வசூலில்  இடமில்லை .

எந்த வித செலவு இல்லாமல்   சென்னை நகரில் மட்டும் கடந்த ஆண்டில்  மக்கள் திலகத்தின் 40 படங்கள்  சுமார்  81 அரங்கில்  தினசரி  மற்றும்  காலை காட்சிகளாக  வெளியாகி  வசூலில்  சாதனை  படைத்தது  உண்மையான வெற்றியாகும் .

மக்கள் திலகம் ஒருவரே  என்றென்றும்  வசூல் சக்கரவர்த்தி .

Monday 18 June 2012

sivaji fan comment and our reply

Professor Selvakumar on reply to sathyasai sivaji fan


Our reply to the above comment